Thursday 29 October 2015

பிரணவகிரியா யோகம் எனும் பாரம்பரிய யோகம் ஒரு அறிமுகம் 8056757875

பிரணவகிரியா யோகம் எனும் பாரம்பரிய யோகம் ஒரு அறிமுகம் 
முன்பதிவிற்கு 8056757875  
யோகம் என்றால் என்ன?
என்பதை பார்க்கும் முன் யோகத்தின் பயனை தெரிந்துகொள்ளுங்கள்,
யோகம் என்றால் உடல் ஆரோக்யத்திற்கும் மன அமைதிக்கும் உண்டான உடற்பயிற்சி என்று கருதிவிட்டார்கள்
யோகமானது உடலுக்கும் மனதுக்கும் ஆன்மாவுக்குமான கலையாக இருப்பதோடுமட்டுமல்லாமல்
வாழ்வில்தேவையான அஷ்ட ஐஸ்வர்யம்,பதினாறு பேறு சக்ல சௌபாக்யம் நலம் பலம் வளம் மற்றும் நாம் நினைக்கும்
எதையும் சாதிக்கும் கலையாக இருக்கிறது அது மட்டுமல்லாமல் இறுதியிலோ அல்லது வாழும் காலத்திலோ ஜுவன் முக்தி
மரணமிலா பெருவாழ்வு வாழ்வதற்குமான பயிற்சியாகவும் இருக்கிறது.இப்படி முறையாக யோகா கற்றுக்கொள்ளாமல்
வெறும் உடற்பயிற்சியாக யோகாவை எல்லோரும் சொல்லி தருவதால்தான் யோகா செய்தும்
ஆரோக்யமில்லை மன அமைதியில்லை என்று பல பேர் வருந்துகிறார்கள்.
முறையாக யோகா கற்றுக்கொண்டால் யோகாவின் மூலம் வாஸ்து பிரச்சனையை சரி செய்ய முடியும்
உங்கள் பெயரை அதிர்ஷ்டமிக்கதாக்க முடியும் காதல் திருமணம் வேலை,வியாபரம்,சொந்த வீடு என நினைத்த
காரியத்தை அடைய முடியும்.எப்படி இது சாத்தியம் பாரம்பரிய யோக கலையில்
யோகம்,தியானம்,சக்கரம்,கோலம்,யந்திரம்,மந்திரம்,தந்திரம்,முத்திரை,பரிகாரம்,தெய்வ உபாசனை,ஸ்தல யாத்திரை,
துறவு,சேவை,தானம்,தர்மம்,
வைத்தியம்,சோதிடம்,ஆருடம்,நாம ஜெபம்,லிகித ஜெபம்,விருக்ஷம் நடுதல்
,பெயர் சூட்டுதல் [அதிர்ஷ்ட பெயர் நியூமராலஜி],வாஸ்து என  ஆய கலைகள் அனைத்தும் இதனுள் அடக்கமாக இருந்தது.
இன்று சாறை பிழிந்து வெளியில் கொட்டிவிட்டு சக்கையை சப்பிடுவது போல யோகத்தின் சாராம்சமான கடவுள்
வழிபாடு,மந்திரம் இவற்றை எல்லாம் விட்டுவிட்டு
வெறுமனே கை கால்களை அசைத்து யோகா என்ர பெயரில் உடற்பயிற்சியை செய்துகொண்டிருக்கிரார்கள்

யோகம் என்றால் என்ன?
கை கால்களை உடலை விருப்பப்படி அசைத்துவிட்டால்,
வளைத்துவிட்டால் அது யோகமா? இல்லை மூச்சு பயிற்சி செய்துவிட்டால் அது
யோகமா?கண்ணை மூடி அமர்ந்துவிட்டால் அது யோகமா?

கைகால்களை வளைத்து நெளித்து அசத்துவதுதான் யோகம் என்றால் ஒரு கழைக்கூத்தாடியை
விட சிறந்த யோகா குரு எவரும் இல்லை,பின்பு எதுதான் யோகம்
யோகம் என்றால் ஒன்றுதல் உடல் மனதோடும் மனம் ஆன்மாவோடும் ஆன்மா
பரமாத்மாவோடும் ஒன்றுவதே யோகம்.
உலகெங்கிலும் உள்ள யோகமையத்தில்
உறுதியாக சொல்ல முடியும் அங்கே இறைவனுக்கு முக்கியத்துவம்
தரப்படுவதே இல்லை.யோகம் என்றால் ராதை கிருஷ்ணனோடு ஐக்கியமாவதை
போல நம்முடைய ஜீவாத்மா பரமாத்மாவோடு ஐக்கியமாகவேண்டும்.
ஏன் இறைவனைவிட்டுவிட்டார்கள் யோகத்தில் யோக மார்க்கம் பொதுவாக இருந்தால்
தான் வியாபாரம் நடக்கும்.அப்போதுதான் கிறித்துவ அன்பர்கள் இசுலாமிய
அன்பர்களும் யோகா செய்வார்கள்.அவர்களும் யோகா செய்வது அவசியம்,
அவர்களுடைய கடவுளையும் அவர்களுடைய மந்திரங்களையும் இணைத்து யோகா சொல்லி தாருங்கள்
நாங்கள் அப்படிதான் சொல்லி தருகிறோம் காரணம் கடவுள் அருளால் மட்டுமே ஒருவர்க்கு யோகம் வாய்க்கும்
இப்போதெல்லாம் தியானத்திற்கு முக்கியத்துவம் தருவதில்லை உண்மையில் சொல்ல போனால்

யோகத்தின் உடல் ஆசனம்
யோகத்தின் மனம் மூச்சு பயிற்சி
யோகத்தின் மூச்சு மந்திரம்
யோகத்தின் ஹ்ருதயம் தியானம்
யோகத்தின் ஆன்மா கடவுள்

யோகத்தின் ஹ்ருதயம் தியானமும் ஆன்மா கடவுளும் இல்லாமல் இங்கே என்ன யோகம் செய்கிறார்கள்,
முதலில் மந்திரம்,ஜெபம்.பூஜை,தான தர்மம் கர்ம நிவாரணம் என்று துவங்கி பின் தீக்ஷை அளிக்கப்படுகிற
மந்திரத்தை சுவாசிக்கும்உயிர் முச்சுடன் சேர்த்து இறுதியில் ஜீவன் முக்திக்கு செல்ல வேண்டும்.
அதற்குள்
நமது ஆசைகளை யோகத்தின் மூலம் நிறைவேற்றிக்கொண்டு நமது கர்மாவை [பாவங்களை] எல்லாம் விலக்கிக்கொண்டு
விருப்பு வெறுப்பற்ற நிலைக்கு நம்மை பக்குவப்படுத்திக்கொண்டு வாழும்போதே ஜீவன் முக்திக்கு முயற்சி செய்யவேண்டும்.
பாரம்பரிய பிரணவ கிரியா யோகம் மிக எளிது இளம் குழந்தைகள்,பெரியவர்கள் முதியவர்கள்,நோயாளிகள்,ஏன் படுக்கையைவிட்டு
 எழுந்திருக்க முடியாதவர்கள் கூட செய்ய முடியும். நீங்கள் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் உங்கள் மத ஆசாரங்களோடு
இணைத்து பாரம்பரிய முறையில் யோகம் சொல்லி தர முடியும்..

கர்ம நிவாரணம் என்றால் என்ன?
கர்மா என்றால் என்ன? கர்மம் என்றால் செயல்,பாவம்,கர்ம நிவாரணம் என்றால் பாவங்களை யோகமார்க்கத்தில்
விலக்கிக்கொள்வது.ஏன் கர்மாவை விலக்க வேண்டும்.பாவம் என்பது இருள் அது ஒருவரின்
வாழ்க்கையை இருளிலேயே துன்பத்திலேயே வைத்திருக்கும்.அவர்கள் எதை செய்தாலும் வெற்றி கிடைக்காது
என்ன மருந்து சாப்பிட்டாலும் ஆரோக்யம் கிட்டாது,
யாரை பார்த்தாலும் காரியம் நடக்காது,பல ஆலயம்,பல பரிகாரம்,பல வாஸ்து நிபுணர்கள் பல மருத்துவர்கள்
பல எண்கணித நிபுணர்களை சந்தித்த போதும் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படாது. ஏன் அப்படி? விதைத்த
விதையை தேடி அழிக்க வேண்டும்.அதை விடுத்து கண்டதை எல்லம் செய்தால் பரிகாரம் ஆகாது,மேலும் கொடுஞ்செயல்களை
புரிந்த ஒருவரை பார்த்து நீதிதேவதை கேட்பாள் பகவானே இப்பாவியை மன்னிக்க போகிறீர்களா என்று.
செயத வினைக்கு ஏற்ற
வினையை ஈடுகொடுக்க வேண்டும்.அதை தான தர்மம் மூலமும் பிரணவ்கிரியா யோகம் மூலமும் செய்ய வேண்டும்.நீங்கள்
யோக மார்க்கத்தில் ஷக்தி பெறும்போது அது உங்கள் கர்ம பதிவை தொடர்புகொள்ளும்,அங்கே யாருக்கு
நீங்கள் அநீதி இழைத்தீர்களோ அவர்களுக்கு உங்கள் புண்ணியம், யோக ஷக்தி தவ ஆற்றல் இறை ஆசிர்வாதம் பங்கிடப்படும்
அப்போது உங்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஆற்றல் ,கவசம் ஐஸ்வர்யம் பெறுவார்கள் அப்போது உங்கள்
பாவ கர்மா நிவாரணம் ஆகும்.கண்ட இடத்தை தேடி அலையாதீர்கள் வந்து பிரணவகிரியா யோகம் செய்யுங்கள்.
பலவகை யோகா மூலம் பலவகையில் உடல் அசைவதற்கு ஏற்ப பல வகை உடலசைவுகளை
யோகபயிற்சியுடன் இணைத்திருக்கிறோம்.காரணம் சில உடல் வாகிற்கு எடுத்த எடுப்பிலேயே யோகா செய்ய இயலாது,
மேலும் சிலரது
பல நாள் பல வருட நோய் மற்றும் மன அழுத்தத்தை உடனே சரி செய்ய வேண்டுமானால் பலவகை அணுகுமுறைகளை
கடைப்பிடிக்க வேண்டி இருக்கிறது
சில சமயங்களில் எத்தனை வழிமுறைகளை கடைபிடித்தாலும் நோயோ வாழ்க்கையின் பிரச்சனைகளையோ கொஞ்சம்
கூட குறைவதாக இல்லை.காரணம் அவர்களது கர்மா.அந்த கர்மங்களை போக்க அதற்கும் தக்க யோக கிரியைகளை
சொல்லி தரவேண்டி இருக்கிறது
_________________________________________________________________________________ பிரணவகிரியா யோகம் என்றால் என்ன?

எண்ணாதிருங்கள்
எண்ணினால் நல்லதையே எண்ணுங்கள்
நல்லதையே எண்ணினாலும் வலிமையாக எண்ணுங்கள்
வலிமையாக எண்ணினாலும் தக்க யோக மார்க்கத்தில் எண்ணுங்கள்
தக்க யோக மார்க்கத்தில் எண்ணினாலும் பிரணவ கிரியா யோக மார்க்கத்தில் எண்ணுங்கள்

எண்ணுவது இக மார்க்கம் எண்ணாமலிருப்பது அக மார்க்கம்
எண்ணத்திலிருந்து எண்ணா நிலைக்கு போவதற்கே மந்திரம் உபயோகப்படுகிறது,ஒரு மந்திரத்தைதொடர்ந்து  ஜெபிக்கும்போது
ஆரம்பத்தில் எண்ண அலைகள் அங்கும் இங்கும் உங்களை அலைக்கழிக்கும் போக போக மந்திரத்தில் மன நாட்டம் சென்று
எண்ணம் அடங்கிவிடும்.இதனால் சாதனை வெற்றி நம்வசம் ஆகிறது நினைத்த காரியம் கை கூடுகிறது
____________________________________________________________________________
பிரணவகிரியா என்பது பிரணவமந்திரமான ஓம்காரத்தை பல வழிமுறைகளில் பயன்படுத்தி நம் காரியங்களை
நிறைவேற்றிக்கொண்டு வாழும்போதோ வாழ்வின் இறுதி காலத்திலோ நமது ஆன்மா விடுதலைய நிலையை
அடைய செவதற்கான ஒரு அரிய யோக மார்க்கம்.இம்முறையில் வாழ்வுக்கான பொருளும் பெறலாம்

ஞானத்திற்கான அருளும் பெறலாம்

1 comment: