Wednesday 27 May 2015

“திரு. ஓம் “ அவர்கள் பற்றி சிறு அறிமுகம்

திரு. ஓம் “ அவர்கள் பற்றி சிறு அறிமுகம்
குருஜி  ரங்கநாத   ஸ்ரீநிவாசசித்தர்" அவர்களிடம்  உண்மையான இந்திய ஆன்மிக கலைகளான யோகம் தியானம்,மந்த்ரம்,யந்த்ரம்,தாந்த்ரீகம்,ஆருடம்,பிரம்மலிபி பரிகாரம்,கர்ம நிவாரண பயிற்சி,கணேச உபாசனை,சித்தர் உபாசனைதெய்விக மாந்த்ரிகம்,கருணை மிகுந்த சன்மார்க்க நெறிகள்,வைத்தியம்பிரணவகிரியா யோகம் முதலிய பல அரிய விஷயங்களை பயின்று மக்களுக்கு சேவை செய்து வருகிறார்.பல சித்தர்கலையும் குருமார்களையும் பல தேவதைகளையும்  பிரணவ கிரியா யோக முறையில் பூஜித்து வருகிறார்.திருவண்ணாமலை யோகிராம் சுரத்குமாரையும் தொழுது வருகிறார்.
அவருக்கு பன்முகம் இருக்கிறது

இயற்கை வைத்தியர் 
[மருந்துடனோ மருந்தின்றி மந்திரத்தின் மூலமோ உங்கள் வியாதியை குணப்படுத்தும் வல்லமை உடையவர் ]
ஹோம யாக பயிற்சியாளர்
குழந்தைகள் நல ஆலோசகர்,
சக்சஸ்ப்ராமிஸ் நியூமராலஜி கண்டுபிடிப்பாளர்[ அதிர்ஷ்ட பெயர் நிபுணர் ]
- இந்த நியூமராலஜியின் மூலம் பெயர் வைப்பவர்கள் நிச்சயம் சாதிப்பார்கள்.
பரிகார நிபுணர்
மன நல ஆலோசகர்
வேலை வாய்ப்பு வழங்குநர்
யோக குரு பிரணவகிரியா யோக பயிற்சியாளர் 
[மிகவும் ஷக்தி வாய்ந்த யோக முறை இதை கற்றுக்கொள்பவர்கள் பாக்ய சாலிகள்]
மாந்திரிக நிவாரணர்
திருமண தகவல் மையம் நடத்துனர்
வாசியோக பயிற்சியாளர்
கர்மநிவாரண மற்றும் ஜீவன் முக்தி பயிற்சியாளர்

ஆகவே வாசகர்களே அவரிடம் செல்லுங்கள் எந்த பிரச்சனையும் நீங்கும் எந்த காரியமும் கை கூடும்.
நீங்கள் கடன் பிரச்சனை,பண வருவாய் பிரச்சனை என்றால் 
மிக மிக குறைந்த செலவில் பெரிய அளவில் தொழில் தொடங்கவேண்டுமென்றால் அவருடன் இணைந்துகொள்ளுங்கள்.வெளி நாடு செல்ல வேண்டாம்.பல லட்சத்தை ஒரு தொழிலில் முடக்கி அவஸ்தை படவேண்டாம்.சில ஆயிரம் இருந்தால் போதும் நீங்களும் முதலாளிதான்.அவரிடம் வேலைக்கு வருபவர்கள் முதலாளி ஆகும் விந்தையை அவரிடம் தவிர வேறு எவரிடமும் நான் கண்டதில்லை.ஹோம் பேஸ்டு ஜாப் என்று அவரிடம் சென்ற நான் சிறு தொகை கட்டி நானும் முதலாளியாகிவிட்டேன்.ஐட்டி துறைக்கு இணையாக நானும் 3 மணி நேரம் மட்டுமே தினமும் வேலை செய்து அதிக வருவாய் பெறுகிறேன்.நீங்களும் பெற வேண்டும் என்பதே எனது விருப்பம்.நீங்கள் விரும்பினால் 7871108184 என்ற எண்ணுக்கு ஜெய் மாம் லக்ஷ்மி என்று தொடர்புகொள்ளுங்கள்.அல்லது 8056156496 இந்த எண்ணுக்கு ஓம் என்று தொடர்பு கொள்ளுங்கள்

Tuesday 26 May 2015

விநாயக பெருமானின் தமிழ்ப்பாடல் - 1 [விரைவில் திருமணம் நடக்க ] கணேசத் தனித் திருமாலை

வாசகர்களே ஓம் பாஸிட்டிவ் ஆர்.பி.ஓம் அவர்கள் விநாயக பெருமானின் பாடல்களை வழங்க இருகிறார் படித்து பயன் பெறுங்கள்.
அவரை பற்றி நிச்சயம் அறிந்துகொள்ளுங்கள் எல்லோர்க்கும் பயனுள்ளதாக இருக்கும்.
அவரை பற்றிய லின்க் இதோ
ஓம் 
என் அன்னையின் திருப்பாத கமலங்கள் சரணம்
என் குருநாதர்களின் திருப்பாத கமலங்கள் சரணம்
என் காதல் நாயகன் ,என் நண்பன்,மதா பிதா குரு தெய்வம் என அனைத்துமாய் விளங்கும்  விநாயகபெருமானின் திருப்பாத கமலங்கள் சரணம்
யோகிராம் சுரத்குமார்
யோகிராம் சுரத்குமார்
யோகிராம் சுரத்குமார்
ஏசு அல்லா ஹரஹர ஓம்
ராதே கிருஷ்ண கணேசா ஜெய ஜெய ஓம்
ஓம் நலமாக இருக்கிறோம் ! பலமாக இருக்கிறோம் ! வளமாக இருக்கிறோம் !!
ஓம் நலமாக இருக்கிறோம் ! பலமாக இருக்கிறோம் ! வளமாக இருக்கிறோம் !!
ஓம் நலமாக இருக்கிறோம் ! பலமாக இருக்கிறோம் ! வளமாக இருக்கிறோம் !!
ஜெய் ஜெய் ஓம் ஜெய் ஜெய்
ஜெய் ஜெய் கணபதி ஜெய் ஜெய்
கணேசத் தனித் திருமாலை
திங்கள்அம் கொழுந்து வேய்ந்த செஞ்சடைக் கொழுந்தே போற்றி
மங்கைவல் லபைக்கு வாய்த்த மகிழ்நநின் மலர்த்தாள் போற்றி
ஐங்கர நால்வாய் முக்கண் அருட்சிவ களிறே போற்றி
கங்கையை மகிழும் செல்வக் கணேசநின் கழல்கள் போற்றி
உலகம் பரவும் பொருள்என் கோஎன் உறவென்கோ
கலகம் பெறும்ஐம் புலன்வென் றுயரும் கதிஎன்கோ
திலகம் பெறுநெய் எனநின் றிலகும் சிவம்என்கோ
இலகைங் கரஅம் பரநின் தனைஎன் என்கேனே
அடியார் உள்ளம் தித்தித் தூறும் அமுதென்கோ
கடியார் கொன்றைச் செஞ்சடை யானைக் கன்றென்கோ
பொடியார் மேனிப் புண்ணியர் புகழும் பொருள்என்கோ
அடிகேள் சித்தி விநாயக என்என் றறைகேனே

கமலமலர் அயன்நயனன் முதல்அமரர் இதயம்உறு கரிசகல அருள்செய்பசு பதியாம்
நிமலநிறை மதியின்ஒளிர் நிரதிசய பரமசுக நிலையைஅருள் புரியும்அதிபதியாம்
விமலபிர ணவவடிவ விகடதட கடகரட விபுலகய முகசுகுண பதியாம்
அமலபர சிவஒளியின் உதயசய விசயசய அபயஎனும் எமதுகண பதியே
அம்பொன்று செஞ்சடை அப்பரைப் போல்தன் அடியர்தம்துக்
கம்பொன்றும் வண்ணம் கருணைசெய் தாளும் கருதுமினோ
வம்பொன்று பூங்குழல் வல்லபை யோடு வயங்கியவெண்
கொம்பொன்று கொண்டெமை ஆட்கொண் டருளிய குஞ்சரமே
திருமால் வணங்கத் திசைமுகன் போற்றச் சிவமுணர்ந்த
இருமா தவர்தொழ மன்றகத் தாடு மிறைவடிவாக்
குருமா மலர்ப்பிறை வேணியு முக்கணுங் கூறுமைந்து
வருமா முகமுங்கொள் வல்லபை பாகனை வாழ்த்துதுமே
வாழ்க வளமுடன்!
கணேஷ் மஹராஜனின் திரு அருளால் நீங்கள் எப்படி இருந்தாலும்
உங்கள் ஜாதகம் [ பிரம்ம லிபி  தலை எழுத்து ] எப்படி இருந்தாலும்
இன்றிலிருந்து உங்கள் வாழ்வு வளம் பெறும்
அன்பெனும் ஆல மரமாய் நாம் பரந்து விரிந்து அதன் ஈர நிழலில்
சகல ஜீவராசிகளையும் இளைப்பாற செய்வோம்
அன்பாயிருப்போம் அன்பையே விதைபோம்
- அன்புடன் ஆர்.பி.ஓம்  
ஏதேனும் சந்தேகங்களுக்கு கீழ் கண்ட அழைத்தால் விளக்கம் கிடைக்கும்
உங்கள் பெயர்,செல் எண் ஈ மெயில் மெசேஜ் செய்துவிட்டு பின்பு அழைக்கவும்

மனதை வளப்படுத்தும் மகத்தான கதைகள் -1 OM POSITIVE WEIGHTLOSS TABLET 8056156496,9962442417

கதைகள்
குழந்தைகள் நல ஆலோசகர் ஆர்.பி.ஓம் அவர்கள் குழந்தைகளுக்காக எழுதுகிற கட்டுரையை பெரியவ்ர்களும் படித்து உங்கள் குழந்தைகளையும் படிக்க செய்து மனதை நல் வழியில் செலுத்தி இறைவனின் திரு அருளுக்கு பாத்திரமகும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இனி அவரது கதை இதோ
ஓம் 
என் அன்னையின் திருப்பாத கமலங்கள் சரணம்
என் குருநாதரின் திருப்பாத கமலம் சரணம்


என் காதல் நாயகன் ,நண்பன்,மதா பிதா குரு தெய்வம் என அனைத்துமாய் விளங்கும்  விநாயகபெருமானின் திருப்பாத கமலம் சரணம்
யோகிராம் சுரத்குமார்
யோகிராம் சுரத்குமார்
யோகிராம் சுரத்குமார்
ஓம் ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஜெய் ராம்
அன்புள்ளம் கொண்ட வாசகர் பெருமக்களே
நான் எனது அன்னையிடம்,பாட்டியிடம்,சொற்பொழிவு அறிஞர்களிடம் மற்றவர்களிடம் கேட்ட கதைகளை  குழந்தைகளுக்கு புரியும் வண்ணமாக தர இருக்கிறேன். நீங்களும் எனக்கு கதைகளை அனுப்பி வைக்கலாம்.


தலைப்பு :நேர்மை எனும் விதை
 மனம் ஒரு குழந்தை அது சொன்னால் புரிந்துகொள்ளும் சிலரது மனம் அடம் பிடிக்கும் பிடிவாத குழந்தை தினமும் பக்குவமாக எடுத்து சொல்ல சொல்ல நிச்சயம் புரிந்துகொள்ளும்.இதை படிக்கும் யாவரும் தான் படிக்கவில்லை தனது ஆன்மா[தன்க்குள் இருக்கும் இறைவன் படிப்பதாக உணர்ந்து படியுங்கள்]

மனம் எந்த நல்ல கருத்தையாவது பிடித்துகொள்ளத்தாஅன் தாமதம் ஆகும் விளையாட்டு போக்கிலே பிடித்துகொண்டதானால் அந்த கருத்தில் நிலை பெற்றுவிடும். மஹாத்மா சத்தியம் தவறாமைக்கு காரணம் அவர்  கேட்ட அரிச்சந்திர நாடகம்தான் காரணம்.சரி இன்று முதன் முதலில் நேர்மையை பற்றி பார்ப்போம்.

நேர்மைக்கு எப்பொதும் மதிப்பு இருக்கும்,நமது மனமும் நிம்மதியோடிருக்கும்,மடியிலே கனமிருந்தால்தான் வழியிலே பயமிருக்கும் என்பார்கள்.அப்போதெல்லாம் ஒரே இருண்ட காடு கள்வர்கள் பயம்,எதையாவது கொண்டு சென்றால் பயத்தோடுதான் கொண்டு செல்ல வேண்டும்,எதையும் கொண்டுபோகாதாவன் தைரியமாக நடந்து  செல்வான்.அதனால்தான் இந்த பழமொழி வந்தது
.
நமது மனதில் நேர்மையை விதைத்தால்என்ன பலன் கிடைக்கும் என்பதை ஒரு விதை கதை மூலம் தெரிந்துகொள்வோம் வாருங்கள்
ஏராளமான சொத்தை நிர்வாகம் செய்து வந்தார் ஒரு தோட்டக்காரர்.அவர் மிகவும் நல்லவர் கண்ணியமானவர்.
அவருக்கு வயதாகி விட்டதால் அவர் தனது பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார்.அரசர் வருத்தப்பட்டார் உன்னை போல தோட்டக்காரனை விசுவாசியை இனி என்னால் பார்க்க முடியுமா என்று வருத்தப்பாட்டார்.விசுவாசி தோட்டகாரர் சொன்னார் அரசே உங்கள் நல்ல மனத்திற்கு என்னை போலவே ஒருவர் கிடைப்பார் அதற்கு வழி செய்கிறேன் கவலையை விடுங்கள் என்றார். தனக்கு கீழ் வேலை செய்யும்  எல்லோரையும் தன் அறைக்கு  வருமாறு கட்டளை இட்டார்.

உங்களில் ஒருவர் தான் என் பொறுப்பை ஏற்க வேண்டும், அதனால் உங்களுக்கு ஒரு போட்டி வைக்க போகிறேன். யார் வெற்றியடைகிறார்களோ  அவர்கள் என்னிடத்திற்கு வர முடியும் என்றார்

 என் கையில் ஏராளமான விதைகள் இருக்கின்றன இதை ஆளுக்கு ஒன்று கொடுப்பேன். இதை நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டு, உரம் இட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக வளர்த்து அடுத்த வருடம் என்னிடம் காட்ட வேண்டும். யார் செடி நன்றாக வளர்ந்து இருக்கிறதோ அவரே என் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்.

அனைவரும் ஆளுக்கு ஒரு விதை வாங்கி சென்றனர். வேலை செய்யும் பெத்தன்னாவும் ஒரு விதை வாங்கி சென்றான். தன் மனைவியிடம் தனது மேலதிகாரி சொன்ன அனைத்தையும் சொன்னான். அவன் மனைவி தொட்டியும் உரம் தண்ணீர் எல்லாம் அவனுக்கு கொடுத்து அந்த விதையை நடுவதற்க்கு உதவி செய்தாள்.

ஒரு வாரம் கழிந்தது நிறுவனதில் இருக்கும் அனைவரும் தங்கள் தொட்டியில் செடி வளர ஆரம்பித்து விட்டது என்று பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். ஆனால் பெத்தன்னாவின் தொட்டியில் செடி இன்னும் வளரவே ஆரம்பிக்கவில்லை.

ஒரு மாதம் ஆனது செடி வளரவில்லை, நாட்கள் உருண்டோடின ஆறு மாதங்கள் ஆனது அப்பொழுதும் அவன் தொட்டியில் செடி வளரவே இல்லை. நான் விதையை வீணாக்கிவிட்டேனா என்று புலம்பினான் ஆனால் தினந்தோறும் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தவில்லை. தன் தொட்டியில் செடி வளரவில்லை என்று யாரிடமும் சொல்லவில்லை.

ஒரு வருடம் முடிந்து விட்டது எல்லாரும் தொட்டிகளை மேலதிகாரியிடம் காட்டுவதற்காக எடுத்து வந்தார்கள். பெத்தன்னா தன் மனைவியிடம் காலி தொட்டியை நான் எடுத்து போகமாட்டேன் என்று சொன்னான்.  அவன் மனைவி அவனை சமாதானப்படுத்தி நீங்கள் ஒரு வருடம் முழுக்க உங்கள் மேலதிகார் சொன்ன மாதிரி செய்தீர்கள். செடி வளராததற்கு நீங்கள் வருந்த வேண்டியதில்லை. நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் தொட்டியை எடுத்து சென்று மேலதிகாரியிடம் காட்டுங்கள் என்றாள்.

பெத்தன்னாவும் காலி தொட்டியை அரண்மனைக்கு எடுத்து சென்றான். எல்லார் தொட்டியையும் பார்த்தான் விதவிதமான செடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரத்தில் இருந்தன. இவன் தொட்டியை பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

மேலதிகாரி எல்லாரையும் தன்னுடைய அறைக்கு வருமாறு சொன்னார்.  அருமை எல்லாரும் செம்மையாக செடியை வளர்த்து உள்ளீர்கள் உங்களில் ஒருவர் தான் இன்று பொறுப்பு ஏற்றுக்கொள்ளபோகறீர்கள் 
என்றார். எல்லாருடைய செடியையும் பார்வை இட்டார். பெத்தன்னா கடைசி வரிசையில் நின்றிருந்தான் அவனை அருகே வருமாறு அழைத்தார்.

பெத்தன்னா தன்னை வேலையை விட்டு நீக்கத்தான் கூப்பிடுகிறார்.ஆவது ஆகட்டும் நாம் என்ன தவறு செய்தோம் என்று எண்ணிக் கொண்டே சென்றான். மேலதிகாரி பெத்தானாவிடம் உன் செடி எங்கே என்று கேட்டார். ஒரு வருடமாக அந்த விதையை நட்டு உரமிட்டு தண்ணீர் விட்டதை விலாவாரியாக சொன்னான்.

மேலதிகாரி பெத்தனாவை தவிர அனைவரும் உட்காருங்கள் என்றார். பிறகு பெத்தனாவின்  தோளில் கையை போட்டுகொண்டு எமது நிர்வாகத்தை ஏற்று நடத்தப் போகிறவர் இவர்தான் என்றார். பெத்தன்னாவுக்கு ஒரே அதிர்ச்சி தன் தொட்டியில் செடி வளரவே இல்லை பிறகு ஏன் நமக்கு இந்த பொறுப்பை கொடுக்கிறார் என்று குழம்பிபோனார்.

சென்ற வருடம் நான் உங்கள் ஆளுக்கு ஒரு விதை கொடுத்து வளர்க்க சொன்னேன் அல்லவா அது அனைத்தும் அவிக்கப்பட்ட விதைகள் [Boiled seeds]. அந்த விதைகள் அவிக்கப்பட்டதால் அது முளைக்க இயலாது. நீங்கள் அனைவரும் நான் கொடுத்த விதை முளைக்காததால் அதற்கு பதில் வேறு ஒரு விதையை நட்டு வளர்த்து கொண்டு வந்தீர்கள். பெத்தன்னா  மட்டுமே நேர்மையாக நடந்து கொண்டான், ஆகவே அவனே எனக்கு பிறகு எமது பொறுப்பை நிர்வகிக்க தகுதியானவன் என்றார்.
நேர்மை என்பது ஒரு பலம் யார்க்கும் அஞ்சவேண்டியதில்லை,தலை குனிய வேண்டிய அவசியமில்லை.அது ஒரு கவசம்.நேர்மையை விதைத்தால் அது நல்ல பலனை தரும்.மனிதர்கள் கவனிக்கமல் போனாலும் நேர்மையான மனிதர்களை கடவுள் கவனித்துக்கொண்டிருக்கிரார்.
உங்கள் குழந்தைகளை நல்வழிப்படுத்த வெண்டுமென்றால் என்னிடம் அழைத்து வாருங்கள் கதை பயிற்சி தியான பயிற்சி ,மந்திர பயிற்சி மூலம் அதை செய்யலாம்
வாழ்க வளமுடன்

ஏசு அல்லா ஹரஹர ஓம்
ராதே கிருஷ்ண கணேசா ஜெய ஜெய ஓம்

ஓம் நலமாக இருக்கிறோம் ! பலமாக இருக்கிறோம் ! வளமாக இருக்கிறோம் !!
ஓம் நலமாக இருக்கிறோம் ! பலமாக இருக்கிறோம் ! வளமாக இருக்கிறோம் !!
ஓம் நலமாக இருக்கிறோம் ! பலமாக இருக்கிறோம் ! வளமாக இருக்கிறோம் !!

கணேஷ் மஹராஜனின் திரு அருளால் நீங்கள் எப்படி இருந்தாலும்
உங்கள் ஜாதகம் [ பிரம்ம லிபி  தலை எழுத்து ] எப்படி இருந்தாலும்
இன்றிலிருந்து உங்கள் வாழ்வு வளம் பெறும்
அன்பெனும் ஆல மரமாய் நாம் பரந்து விரிந்து அதன் ஈர நிழலில்
சகல ஜீவராசிகளையும் இளைப்பாற செய்வோம்
அன்பாயிருப்போம் அன்பையே விதைபோம்
- அன்புடன் ஆர்.பி.ஓம்  
ஏதேனும் சந்தேகங்களுக்கு கீழ் கண்ட எண்ணில் அழைத்தால் விளக்கம் கிடைக்கும்
உங்கள் பெயர்,செல் எண் ஈ மெயில் மெசேஜ் செய்துவிட்டு பின்பு அழைக்கவும்
OM POSITIVE WEIGHTLOSS TABLET  [ உடல் எடைக்கு நிரந்தர தீர்வு ]


Monday 25 May 2015

OM POSITIVE USEFULL MESSAGE 2 [ விநாயகர் அபிஷேக பலன் ]


எண்கணித நிபுணர் ஆர்.பி.ஓம் தொடர்ந்து அளிக்க இருக்கும் கணேச பொக்கிஷத்தை  நீங்களும்  படித்துணர்ந்து  மற்றவர்களையும் படிக்கச் செய்து,இப்புண்ணிய  கைங்கர்யத்தில்  பங்கெடுத்துக் கொள்ளுங்கள். ஒருவர்க்கு நீங்கள் குடிக்க கற்று கொடுத்தால் வாழ்க்கை கெட்டு போகும்.அதனால் உங்களுக்கு பாவம் வந்து சேரும்.அதை விட நல்லதை படிக்க கற்று கொடுத்தால் புண்ணியம் பெருகும்.அந்த புண்ணிய பலத்தால் அவர்களின் தீவினைகள் அற்றுபோகும்.உங்களுக்கு புண்ணியமும் வந்து சேரும்..

இனி அவரது தெய்விகப் பணி தொடரும்.........

ஓம் 
என் அன்னையின் திருப்பாத கமலங்கள் சரணம்
என் குருநாதரின் திருப்பாத கமலம் சரணம்
என் காதல் நாயகன் ,நண்பன்,மதா பிதா குரு தெய்வம் என அனைத்துமாய் விளங்கும்  விநாயகபெருமானின் திருப்பாத கமலம் சரணம்

 அன்புள்ளம் கொணட வாசகர்களே எல்லாம் உடையவன் இறைவன்.எல்லாம் கொடுத்த இறைவனுக்கு ஞானிகள் தம் உடல் பொருள்  ஆவியை ஈந்தனர்.

யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம்  உண்ணும் போதுஒரு கைப்பிடி
யாவர்க்குமாம்  பிறர்க்கு இன்னுரை தானே,

பாச்சிலை கொடுத்தாலே மகிழ்கிற இறைவன் சாப்பிடும்போது அவனுக்கு சொல்கிற சமர்ப்பணத்தின் மூலம் நம்மை ஆசிர்வதிக்கிறான்.கடவுள் பெற்ற பிள்ளைகளாகிய நாம் தவறு செய்துவிடுகிறோம். தவறை இறைவன் மன்னிப்பான் பாவங்களை அவ்வளவு சீக்கிரத்தில் மன்னிப்பதில்லை.இருந்தாலும் நாம் அவனை விடுவதில்லை விடாது அவன் பாதத்தை இறஞ்சிகொண்டிருக்கிறோம்.கெஞ்சுகிறோம் கதறுகிறோம் நம் பாவத்தின் அளவிற்கேற்ப பரிகார முறைகளை ரிஷி பெருமக்கள் வகுத்து வைத்திருக்கிறார்கள்.அதை பிரம்ம லிபி முறையில் ஆய்வு செய்து சொல்வார்கள்.எல்லோரும் அந்த சூட்சுமத்தை அறிந்துகொள்ள முடியாதல்லவா,இறைவனை எந்தெந்த பொருளா;ல்
அபிஷேகம் செய்தால் பாவங்கள் நீங்கி நாம் கோரிய பலன்களை அடைய முடியும் என்று கண்டறிந்து தந்துள்ளார்கள்.வச்தி உள்ளவர்களால் 1008 பரிகாரம் செய்ய முடியும் வசதி இல்லாதவர்களால் பாவம் என்ன செய்ய முடியும்.கவலையை விடுங்கள் உங்களுக்கு என்ன தேவையோ கீழ்கணட பட்டியலில் இருந்து தேர்ந்தெடுத்து தொடர்ந்து செய்து வாருங்கள். நீங்கள் கோரிய வரத்தை எம்பெருமான் கணேச பெருமான் அளிக்க வேண்டுமென்று இந்த கட்டுரையின் வாயிலாக நானும் பிரார்த்தித்துகொள்கிறேன்


முக்கிய குறிப்பு :
மிகச்சரியாக வழிபாடு செய்வது என்பது உங்கள் பிரச்சனைக்கான காரண காரிய அமைப்புகளை பிரம்ம லிபிபரிகாரத்தின் மூலம் ஆராய்ந்து குரு தருகிற உபாசனா மந்திரத்தின் மூலம் வழிபட வேண்டும்.
ஏசு அல்லா ஹரஹர ஓம்
ராதே கிருஷ்ண கணேசா ஜெய ஜெய ஓம்

ஓம் நலமாக இருக்கிறோம் ! பலமாக இருக்கிறோம் ! வளமாக இருக்கிறோம் !!
ஓம் நலமாக இருக்கிறோம் ! பலமாக இருக்கிறோம் ! வளமாக இருக்கிறோம் !!
ஓம் நலமாக இருக்கிறோம் ! பலமாக இருக்கிறோம் ! வளமாக இருக்கிறோம் !!

கணேஷ் மஹராஜனின் திரு அருளால் நீங்கள் எப்படி இருந்தாலும்
உங்கள் ஜாதகம் [ பிரம்ம லிபி  தலை எழுத்து ] எப்படி இருந்தாலும்
இன்றிலிருந்து உங்கள் வாழ்வு வளம் பெறும்
அன்பெனும் ஆல மரமாய் நாம் பரந்து விரிந்து அதன் ஈர நிழலில்
சகல ஜீவராசிகளையும் இளைப்பாற செய்வோம்
அன்பாயிருப்போம் அன்பையே விதைபோம்
- அன்புடன் ஆர்.பி.ஓம்  
ஏதேனும் சந்தேகங்களுக்கு கீழ் கண்ட எண்ணில் அழைத்தால் விளக்கம் கிடைக்கும்
உங்கள் பெயர்,செல் எண் ஈ மெயில் மெசேஜ் செய்துவிட்டு பின்பு அழைக்கவும்


Friday 22 May 2015

OM POSITIVE USEFULL MESSAGE 1 [ ராசி விநாயகர் வழிபாடு ]

ஜெய்மாம் லக்ஷ்மி  வாசகர்களே எங்கள் வாசகர்கள் எல்லா செல்வங்களும் பெற வேண்டும்.அதற்கு   எண்கணித நிபுணர் வேண்டும் என்று தேடிய போது அதிர்ஷ்ட பெயர் வைப்பதில் அற்புதமானவர் என்று அனுபவப்பட்ட என் நண்பர்கள் அறிமுகப்படுத்தினார்கள் கணேச உபாசகர்,கணேச பிரேமி ஓம் பாசிட்டிவ்  ஆர்.பி.ஓம் ஐயா அவர்களை. எங்கள் வெப்சைட்டுக்கு அதிர்ஷ்ட  பெயர் வேண்டும் என்று கேட்ட போது எங்களுக்கு பெயரும் வைத்து ஆன்லைன் ஜாபும் தந்தார்.வாசகர்களே நமக்காக நல்ல விஷயங்களை எழுதவும் ஒப்புக்கொண்டார். 

அன்பான, “ஜெய்மாம் லக்ஷ்மி ”  ஆன்மீக  அன்பர்களே,  நமது   ”   “ஓம் பாஸிட்டிவ் யூஸ்ஃபுல் மெசேஜ்"பகுதியில் இனி   “குருஜி  ரங்கநாத   ஸ்ரீநிவாசசித்தரின்சீடர்  கணேச பிரேமி,  திரு. ஆர்.பி.ஓம்  மஹராஜ்அவர்கள்   ஆன்மீக,பரிகாரம், வைத்தியம், முத்திரை,அதிர்ஷ்ட பெயர் எண்கணிதம் தொடர்பான  தகவல்களை  அளிக்கவிருகிறார்கள். 
திரு. ஓம் அவர்கள் பற்றி சிறு அறிமுகம்
குருஜி  ரங்கநாத   ஸ்ரீநிவாசசித்தர்" அவர்களிடம்  உண்மையான இந்திய ஆன்மிக கலைகளான யோகம் தியானம்,மந்த்ரம் ,யந்த்ரம்,தாந்த்ரீகம்,ஆருடம்,பிரம்மலிபி பரிகாரம்,கர்ம நிவாரண பயிற்சி, கணேச உபாசனை,சித்தர் உபாசனை, தெய்விக மாந்த்ரிகம்,கருணை மிகுந்த சன்மார்க்க நெறிகள்,வைத்தியம்பிரணவகிரியா யோகம் முதலிய பல அரிய விஷயங்களை பயின்று  அதில் பூரணத்துவம்  பெற்றுளார்.  
அன்பர்களாகிய  நீங்கள்  வாழ்வில் முன்னேறவும், சகலசௌபாக்யங்களையும்,பெற்று  மன அமைதியுடனும், நீண்ட  நல்ஆரோக்யத்துடனும்   ஆனந்தமாக  வாழவும், அனைத்து  விஷயங்களையும், விநாயகரின்  வழிபாட்டின்  மூலம்  தங்களுக்கு  அளிக்க உள்ளார். அப்பொக்கிஷத்தை  நீங்களும்  படித்துணர்ந்து  மற்றவர்களையும் படிக்கச் செய்து,இப்புண்ணிய  கைங்கர்யத்தில்  பங்கெடுத்துக் கொள்ளுங்கள். குடிக்க கற்று கொடுத்தால் வாழ்க்கை கெட்டு போகும்.நல்லதை படிக்க கற்று கொடுத்தால் புண்ணிய பலத்தால் அவர்களின் தீவினைகள் அற்றுபோகும்.

இனி அவரது தெய்விகப் பணி தொடரும்.........

ஓம் 
என் அன்னையின் திருப்பாத கமலங்கள் சரணம்
என் குருநாதர் ஸ்ரீ ரங்க நாத ஸ்ரீநிவாச சித்தரின் திருப்பாத கமலம் சரணம்
என் காதல் நாயகன் ,நண்பன்,மதா பிதா குரு தெய்வம் என அனைத்துமாய் விளங்கும்  விநாயகபெருமான் திருப்பாத கமலம் சரணம்

ஜோதிட ரீதியாக விநாயகர் வழிபாடு:-
1. மேடம், கடகம், துலாம், மகரம் ஆகிய சரலக்னங்களில் ஒரு லக்னம் உதிக்க சித்திரை, உத்திராடம், ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் 

வளர்பிறையில் வரும் சனிக்கிழமைகளில் சூரிய உதயத்திற்கு பின்னர் வரும் 1மணி 30 நிமிடத்திற்குள் அதாவது காலை 6.00 மணி முதல் 7.30 க்குள் தேங்காய் உடைத்து அருகம்புல்லினால் விநாயகரை அர்ச்சனை செய்து சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தேனும் பாலும், உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மோதகமும், ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பாசிப்பயறும் நைவேத்தியம் செய்து வெற்றிலை, பழம், பாக்கு வைத்து வழிபடவேண்டும். மேற்கூறிய லக்னங்கள் உதிக்க மற்றய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வளர்பிறை செவ்வாய், சனிக் கிழமைகளில் தேங்காய் பலி கொடுத்து, செவ்வரலி புட்பத்தினால் வினாயகரை அர்ச்சனை செய்து, பசும்பால், அப்பம், வடை, அவல், பொரிகடலை நைவேத்தியம் செய்து வெற்றிலை, பழம், பாக்கு வைத்து வழிபடவேண்டும். இதனால் எடுத்த காரியங்களில் இடர் நீங்கி காரிய சித்தி உண்டாகும். சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.
2. ரிசபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய ஸ்திர லக்னங்களில் ஒரு லக்னம் உதிக்க எந்த நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் வளர்பிறை செவ்வாய், சனிக்கிழமைகளில் விடியற்காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் அதாவது காலை 4.00 மணிமுதல் 6.00 மணி வரையான காலத்தில் தேங்காய் உடைத்து வெள்ளெருக்கு மலர் அல்லது வெள்ளரலி மலர் அல்லது வெண்தாமரை மலரினால் அர்ச்சனை செய்து, பசும் பால், அவல், கொண்டக்கடலை சுண்டல், பாசிப்பயறு நைவேத்தியம் செய்து வெற்றிலை, பழம், பாக்கு வைத்து வழிபடவேண்டும். இதனால் எடுத்த காரியங்களில் இடர் நீங்கி காரிய சித்தி உண்டாகும். சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.
3. மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய உபய லக்னங்களில் ஒரு லக்னம் உதிக்க எந்த நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் வளர்பிறை செவ்வாய், சனிக்கிழமைகளில் காலை 5.15மணி முதல் 6.45மணி வரையிலான காலத்தில் தேங்காய் உடைத்து மல்லிகைப் பூ அல்லது முல்லைப் பூ அல்லது செந்தாமரை மலரினால் அர்ச்சனை செய்து பசும் பால், பால்பாயாசம், பானகம் நைவேத்தியம் செய்து வெற்றிலை, பழம், பாக்கு வைத்து வழிபடவேண்டும். இதனால் எடுத்த காரியங்களில் இடர் நீங்கி காரிய சித்தி உண்டாகும். சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.
ஓம்
முக்கிய குறிப்பு :மிகச்சரியாக வழிபாடு செய்வது என்பது உங்கள் பிரச்சனைக்கான காரண காரிய அமைப்புகளை பிரம்ம லிபிபரிகாரத்தின் மூலம் ஆராய்ந்து குரு தருகிற உபாசனா மந்திரத்தின் மூலம் வழிபட வேண்டும்.
ஏசு அல்லா ஹரஹர ஓம்
ராதே கிருஷ்ண கணேசா ஜெய ஜெய ஓம்

ஓம் நலமாக இருக்கிறோம் ! பலமாக இருக்கிறோம் ! வளமாக இருக்கிறோம் !!
ஓம் நலமாக இருக்கிறோம் ! பலமாக இருக்கிறோம் ! வளமாக இருக்கிறோம் !!
ஓம் நலமாக இருக்கிறோம் ! பலமாக இருக்கிறோம் ! வளமாக இருக்கிறோம் !!

கணேஷ் மஹராஜனின் திரு அருளால் நீங்கள் எப்படி இருந்தாலும்
உங்கள் ஜாதகம் [ பிரம்ம லிபி  தலை எழுத்து ] எப்படி இருந்தாலும்
இன்றிலிருந்து உங்கள் வாழ்வு வளம் பெறும்
அன்பெனும் ஆல மரமாய் நாம் பரந்து விரிந்து அதன் ஈர நிழலில்
சகல ஜீவராசிகளையும் இளைப்பாற செய்வோம்
அன்பாயிருப்போம் அன்பையே விதைபோம்
- அன்புடன் ஆர்.பி.ஓம்  
ஏதேனும் சந்தேகங்களுக்கு கீழ் கண்ட அழைத்தால் விளக்கம் கிடைக்கும்
உங்கள் பெயர்,செல் எண் ஈ மெயில் மெசேஜ் செய்துவிட்டு பின்பு அழைக்கவும்