Tuesday 26 May 2015

மனதை வளப்படுத்தும் மகத்தான கதைகள் -1 OM POSITIVE WEIGHTLOSS TABLET 8056156496,9962442417

கதைகள்
குழந்தைகள் நல ஆலோசகர் ஆர்.பி.ஓம் அவர்கள் குழந்தைகளுக்காக எழுதுகிற கட்டுரையை பெரியவ்ர்களும் படித்து உங்கள் குழந்தைகளையும் படிக்க செய்து மனதை நல் வழியில் செலுத்தி இறைவனின் திரு அருளுக்கு பாத்திரமகும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இனி அவரது கதை இதோ
ஓம் 
என் அன்னையின் திருப்பாத கமலங்கள் சரணம்
என் குருநாதரின் திருப்பாத கமலம் சரணம்


என் காதல் நாயகன் ,நண்பன்,மதா பிதா குரு தெய்வம் என அனைத்துமாய் விளங்கும்  விநாயகபெருமானின் திருப்பாத கமலம் சரணம்
யோகிராம் சுரத்குமார்
யோகிராம் சுரத்குமார்
யோகிராம் சுரத்குமார்
ஓம் ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஜெய் ராம்
அன்புள்ளம் கொண்ட வாசகர் பெருமக்களே
நான் எனது அன்னையிடம்,பாட்டியிடம்,சொற்பொழிவு அறிஞர்களிடம் மற்றவர்களிடம் கேட்ட கதைகளை  குழந்தைகளுக்கு புரியும் வண்ணமாக தர இருக்கிறேன். நீங்களும் எனக்கு கதைகளை அனுப்பி வைக்கலாம்.


தலைப்பு :நேர்மை எனும் விதை
 மனம் ஒரு குழந்தை அது சொன்னால் புரிந்துகொள்ளும் சிலரது மனம் அடம் பிடிக்கும் பிடிவாத குழந்தை தினமும் பக்குவமாக எடுத்து சொல்ல சொல்ல நிச்சயம் புரிந்துகொள்ளும்.இதை படிக்கும் யாவரும் தான் படிக்கவில்லை தனது ஆன்மா[தன்க்குள் இருக்கும் இறைவன் படிப்பதாக உணர்ந்து படியுங்கள்]

மனம் எந்த நல்ல கருத்தையாவது பிடித்துகொள்ளத்தாஅன் தாமதம் ஆகும் விளையாட்டு போக்கிலே பிடித்துகொண்டதானால் அந்த கருத்தில் நிலை பெற்றுவிடும். மஹாத்மா சத்தியம் தவறாமைக்கு காரணம் அவர்  கேட்ட அரிச்சந்திர நாடகம்தான் காரணம்.சரி இன்று முதன் முதலில் நேர்மையை பற்றி பார்ப்போம்.

நேர்மைக்கு எப்பொதும் மதிப்பு இருக்கும்,நமது மனமும் நிம்மதியோடிருக்கும்,மடியிலே கனமிருந்தால்தான் வழியிலே பயமிருக்கும் என்பார்கள்.அப்போதெல்லாம் ஒரே இருண்ட காடு கள்வர்கள் பயம்,எதையாவது கொண்டு சென்றால் பயத்தோடுதான் கொண்டு செல்ல வேண்டும்,எதையும் கொண்டுபோகாதாவன் தைரியமாக நடந்து  செல்வான்.அதனால்தான் இந்த பழமொழி வந்தது
.
நமது மனதில் நேர்மையை விதைத்தால்என்ன பலன் கிடைக்கும் என்பதை ஒரு விதை கதை மூலம் தெரிந்துகொள்வோம் வாருங்கள்
ஏராளமான சொத்தை நிர்வாகம் செய்து வந்தார் ஒரு தோட்டக்காரர்.அவர் மிகவும் நல்லவர் கண்ணியமானவர்.
அவருக்கு வயதாகி விட்டதால் அவர் தனது பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார்.அரசர் வருத்தப்பட்டார் உன்னை போல தோட்டக்காரனை விசுவாசியை இனி என்னால் பார்க்க முடியுமா என்று வருத்தப்பாட்டார்.விசுவாசி தோட்டகாரர் சொன்னார் அரசே உங்கள் நல்ல மனத்திற்கு என்னை போலவே ஒருவர் கிடைப்பார் அதற்கு வழி செய்கிறேன் கவலையை விடுங்கள் என்றார். தனக்கு கீழ் வேலை செய்யும்  எல்லோரையும் தன் அறைக்கு  வருமாறு கட்டளை இட்டார்.

உங்களில் ஒருவர் தான் என் பொறுப்பை ஏற்க வேண்டும், அதனால் உங்களுக்கு ஒரு போட்டி வைக்க போகிறேன். யார் வெற்றியடைகிறார்களோ  அவர்கள் என்னிடத்திற்கு வர முடியும் என்றார்

 என் கையில் ஏராளமான விதைகள் இருக்கின்றன இதை ஆளுக்கு ஒன்று கொடுப்பேன். இதை நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டு, உரம் இட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக வளர்த்து அடுத்த வருடம் என்னிடம் காட்ட வேண்டும். யார் செடி நன்றாக வளர்ந்து இருக்கிறதோ அவரே என் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்.

அனைவரும் ஆளுக்கு ஒரு விதை வாங்கி சென்றனர். வேலை செய்யும் பெத்தன்னாவும் ஒரு விதை வாங்கி சென்றான். தன் மனைவியிடம் தனது மேலதிகாரி சொன்ன அனைத்தையும் சொன்னான். அவன் மனைவி தொட்டியும் உரம் தண்ணீர் எல்லாம் அவனுக்கு கொடுத்து அந்த விதையை நடுவதற்க்கு உதவி செய்தாள்.

ஒரு வாரம் கழிந்தது நிறுவனதில் இருக்கும் அனைவரும் தங்கள் தொட்டியில் செடி வளர ஆரம்பித்து விட்டது என்று பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். ஆனால் பெத்தன்னாவின் தொட்டியில் செடி இன்னும் வளரவே ஆரம்பிக்கவில்லை.

ஒரு மாதம் ஆனது செடி வளரவில்லை, நாட்கள் உருண்டோடின ஆறு மாதங்கள் ஆனது அப்பொழுதும் அவன் தொட்டியில் செடி வளரவே இல்லை. நான் விதையை வீணாக்கிவிட்டேனா என்று புலம்பினான் ஆனால் தினந்தோறும் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தவில்லை. தன் தொட்டியில் செடி வளரவில்லை என்று யாரிடமும் சொல்லவில்லை.

ஒரு வருடம் முடிந்து விட்டது எல்லாரும் தொட்டிகளை மேலதிகாரியிடம் காட்டுவதற்காக எடுத்து வந்தார்கள். பெத்தன்னா தன் மனைவியிடம் காலி தொட்டியை நான் எடுத்து போகமாட்டேன் என்று சொன்னான்.  அவன் மனைவி அவனை சமாதானப்படுத்தி நீங்கள் ஒரு வருடம் முழுக்க உங்கள் மேலதிகார் சொன்ன மாதிரி செய்தீர்கள். செடி வளராததற்கு நீங்கள் வருந்த வேண்டியதில்லை. நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் தொட்டியை எடுத்து சென்று மேலதிகாரியிடம் காட்டுங்கள் என்றாள்.

பெத்தன்னாவும் காலி தொட்டியை அரண்மனைக்கு எடுத்து சென்றான். எல்லார் தொட்டியையும் பார்த்தான் விதவிதமான செடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரத்தில் இருந்தன. இவன் தொட்டியை பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

மேலதிகாரி எல்லாரையும் தன்னுடைய அறைக்கு வருமாறு சொன்னார்.  அருமை எல்லாரும் செம்மையாக செடியை வளர்த்து உள்ளீர்கள் உங்களில் ஒருவர் தான் இன்று பொறுப்பு ஏற்றுக்கொள்ளபோகறீர்கள் 
என்றார். எல்லாருடைய செடியையும் பார்வை இட்டார். பெத்தன்னா கடைசி வரிசையில் நின்றிருந்தான் அவனை அருகே வருமாறு அழைத்தார்.

பெத்தன்னா தன்னை வேலையை விட்டு நீக்கத்தான் கூப்பிடுகிறார்.ஆவது ஆகட்டும் நாம் என்ன தவறு செய்தோம் என்று எண்ணிக் கொண்டே சென்றான். மேலதிகாரி பெத்தானாவிடம் உன் செடி எங்கே என்று கேட்டார். ஒரு வருடமாக அந்த விதையை நட்டு உரமிட்டு தண்ணீர் விட்டதை விலாவாரியாக சொன்னான்.

மேலதிகாரி பெத்தனாவை தவிர அனைவரும் உட்காருங்கள் என்றார். பிறகு பெத்தனாவின்  தோளில் கையை போட்டுகொண்டு எமது நிர்வாகத்தை ஏற்று நடத்தப் போகிறவர் இவர்தான் என்றார். பெத்தன்னாவுக்கு ஒரே அதிர்ச்சி தன் தொட்டியில் செடி வளரவே இல்லை பிறகு ஏன் நமக்கு இந்த பொறுப்பை கொடுக்கிறார் என்று குழம்பிபோனார்.

சென்ற வருடம் நான் உங்கள் ஆளுக்கு ஒரு விதை கொடுத்து வளர்க்க சொன்னேன் அல்லவா அது அனைத்தும் அவிக்கப்பட்ட விதைகள் [Boiled seeds]. அந்த விதைகள் அவிக்கப்பட்டதால் அது முளைக்க இயலாது. நீங்கள் அனைவரும் நான் கொடுத்த விதை முளைக்காததால் அதற்கு பதில் வேறு ஒரு விதையை நட்டு வளர்த்து கொண்டு வந்தீர்கள். பெத்தன்னா  மட்டுமே நேர்மையாக நடந்து கொண்டான், ஆகவே அவனே எனக்கு பிறகு எமது பொறுப்பை நிர்வகிக்க தகுதியானவன் என்றார்.
நேர்மை என்பது ஒரு பலம் யார்க்கும் அஞ்சவேண்டியதில்லை,தலை குனிய வேண்டிய அவசியமில்லை.அது ஒரு கவசம்.நேர்மையை விதைத்தால் அது நல்ல பலனை தரும்.மனிதர்கள் கவனிக்கமல் போனாலும் நேர்மையான மனிதர்களை கடவுள் கவனித்துக்கொண்டிருக்கிரார்.
உங்கள் குழந்தைகளை நல்வழிப்படுத்த வெண்டுமென்றால் என்னிடம் அழைத்து வாருங்கள் கதை பயிற்சி தியான பயிற்சி ,மந்திர பயிற்சி மூலம் அதை செய்யலாம்
வாழ்க வளமுடன்

ஏசு அல்லா ஹரஹர ஓம்
ராதே கிருஷ்ண கணேசா ஜெய ஜெய ஓம்

ஓம் நலமாக இருக்கிறோம் ! பலமாக இருக்கிறோம் ! வளமாக இருக்கிறோம் !!
ஓம் நலமாக இருக்கிறோம் ! பலமாக இருக்கிறோம் ! வளமாக இருக்கிறோம் !!
ஓம் நலமாக இருக்கிறோம் ! பலமாக இருக்கிறோம் ! வளமாக இருக்கிறோம் !!

கணேஷ் மஹராஜனின் திரு அருளால் நீங்கள் எப்படி இருந்தாலும்
உங்கள் ஜாதகம் [ பிரம்ம லிபி  தலை எழுத்து ] எப்படி இருந்தாலும்
இன்றிலிருந்து உங்கள் வாழ்வு வளம் பெறும்
அன்பெனும் ஆல மரமாய் நாம் பரந்து விரிந்து அதன் ஈர நிழலில்
சகல ஜீவராசிகளையும் இளைப்பாற செய்வோம்
அன்பாயிருப்போம் அன்பையே விதைபோம்
- அன்புடன் ஆர்.பி.ஓம்  
ஏதேனும் சந்தேகங்களுக்கு கீழ் கண்ட எண்ணில் அழைத்தால் விளக்கம் கிடைக்கும்
உங்கள் பெயர்,செல் எண் ஈ மெயில் மெசேஜ் செய்துவிட்டு பின்பு அழைக்கவும்
OM POSITIVE WEIGHTLOSS TABLET  [ உடல் எடைக்கு நிரந்தர தீர்வு ]


No comments:

Post a Comment