Tuesday 26 May 2015

விநாயக பெருமானின் தமிழ்ப்பாடல் - 1 [விரைவில் திருமணம் நடக்க ] கணேசத் தனித் திருமாலை

வாசகர்களே ஓம் பாஸிட்டிவ் ஆர்.பி.ஓம் அவர்கள் விநாயக பெருமானின் பாடல்களை வழங்க இருகிறார் படித்து பயன் பெறுங்கள்.
அவரை பற்றி நிச்சயம் அறிந்துகொள்ளுங்கள் எல்லோர்க்கும் பயனுள்ளதாக இருக்கும்.
அவரை பற்றிய லின்க் இதோ
ஓம் 
என் அன்னையின் திருப்பாத கமலங்கள் சரணம்
என் குருநாதர்களின் திருப்பாத கமலங்கள் சரணம்
என் காதல் நாயகன் ,என் நண்பன்,மதா பிதா குரு தெய்வம் என அனைத்துமாய் விளங்கும்  விநாயகபெருமானின் திருப்பாத கமலங்கள் சரணம்
யோகிராம் சுரத்குமார்
யோகிராம் சுரத்குமார்
யோகிராம் சுரத்குமார்
ஏசு அல்லா ஹரஹர ஓம்
ராதே கிருஷ்ண கணேசா ஜெய ஜெய ஓம்
ஓம் நலமாக இருக்கிறோம் ! பலமாக இருக்கிறோம் ! வளமாக இருக்கிறோம் !!
ஓம் நலமாக இருக்கிறோம் ! பலமாக இருக்கிறோம் ! வளமாக இருக்கிறோம் !!
ஓம் நலமாக இருக்கிறோம் ! பலமாக இருக்கிறோம் ! வளமாக இருக்கிறோம் !!
ஜெய் ஜெய் ஓம் ஜெய் ஜெய்
ஜெய் ஜெய் கணபதி ஜெய் ஜெய்
கணேசத் தனித் திருமாலை
திங்கள்அம் கொழுந்து வேய்ந்த செஞ்சடைக் கொழுந்தே போற்றி
மங்கைவல் லபைக்கு வாய்த்த மகிழ்நநின் மலர்த்தாள் போற்றி
ஐங்கர நால்வாய் முக்கண் அருட்சிவ களிறே போற்றி
கங்கையை மகிழும் செல்வக் கணேசநின் கழல்கள் போற்றி
உலகம் பரவும் பொருள்என் கோஎன் உறவென்கோ
கலகம் பெறும்ஐம் புலன்வென் றுயரும் கதிஎன்கோ
திலகம் பெறுநெய் எனநின் றிலகும் சிவம்என்கோ
இலகைங் கரஅம் பரநின் தனைஎன் என்கேனே
அடியார் உள்ளம் தித்தித் தூறும் அமுதென்கோ
கடியார் கொன்றைச் செஞ்சடை யானைக் கன்றென்கோ
பொடியார் மேனிப் புண்ணியர் புகழும் பொருள்என்கோ
அடிகேள் சித்தி விநாயக என்என் றறைகேனே

கமலமலர் அயன்நயனன் முதல்அமரர் இதயம்உறு கரிசகல அருள்செய்பசு பதியாம்
நிமலநிறை மதியின்ஒளிர் நிரதிசய பரமசுக நிலையைஅருள் புரியும்அதிபதியாம்
விமலபிர ணவவடிவ விகடதட கடகரட விபுலகய முகசுகுண பதியாம்
அமலபர சிவஒளியின் உதயசய விசயசய அபயஎனும் எமதுகண பதியே
அம்பொன்று செஞ்சடை அப்பரைப் போல்தன் அடியர்தம்துக்
கம்பொன்றும் வண்ணம் கருணைசெய் தாளும் கருதுமினோ
வம்பொன்று பூங்குழல் வல்லபை யோடு வயங்கியவெண்
கொம்பொன்று கொண்டெமை ஆட்கொண் டருளிய குஞ்சரமே
திருமால் வணங்கத் திசைமுகன் போற்றச் சிவமுணர்ந்த
இருமா தவர்தொழ மன்றகத் தாடு மிறைவடிவாக்
குருமா மலர்ப்பிறை வேணியு முக்கணுங் கூறுமைந்து
வருமா முகமுங்கொள் வல்லபை பாகனை வாழ்த்துதுமே
வாழ்க வளமுடன்!
கணேஷ் மஹராஜனின் திரு அருளால் நீங்கள் எப்படி இருந்தாலும்
உங்கள் ஜாதகம் [ பிரம்ம லிபி  தலை எழுத்து ] எப்படி இருந்தாலும்
இன்றிலிருந்து உங்கள் வாழ்வு வளம் பெறும்
அன்பெனும் ஆல மரமாய் நாம் பரந்து விரிந்து அதன் ஈர நிழலில்
சகல ஜீவராசிகளையும் இளைப்பாற செய்வோம்
அன்பாயிருப்போம் அன்பையே விதைபோம்
- அன்புடன் ஆர்.பி.ஓம்  
ஏதேனும் சந்தேகங்களுக்கு கீழ் கண்ட அழைத்தால் விளக்கம் கிடைக்கும்
உங்கள் பெயர்,செல் எண் ஈ மெயில் மெசேஜ் செய்துவிட்டு பின்பு அழைக்கவும்